Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோற்றாலும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: தோனி மனைவி

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (08:10 IST)
தோற்றாலும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்ற போதிலும் நேற்றைய இன்னொரு போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் இனிவரும் அடுத்து வரும் இரண்டு போட்டிகளும் போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த ஆண்டுக்கான பயிற்சி போட்டியாக எடுத்துக் கொள்வோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறியிருந்தார் என்பது தெரிந்ததே 
 
அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியில் அபாரமாக அரைசதமடித்த ருத்ராஜ் கெய்க்வாட் என்ற அபாரமான பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கிடைக்கவும் நேற்றைய போட்டி ஒரு வாய்ப்பாக அமைந்தது 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து தோனியின் மனைவி சாக்சி தோனி கூறியபோது ’இது ஒரு விளையாட்டு யாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள். ஆனால் அனைவரும் வெற்றியாளர்கள் ஆகவே இருக்க முடியாது என்று கூறியுள்ளார் 
 
மேலும் தோல்வி அடைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள் என்று தோனியின் மனைவி சாக்சி தோனி கூறியுள்ளார். சாக்சி தோனியின்  இந்த சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments