Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யகுமார் யாதவ் அதிரடி அரைசதம்: இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (20:59 IST)
சூர்யகுமார் யாதவ் அதிரடி அரைசதம்: இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது 
 
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே தலா 12 மற்றும் 14 ரன்களில் அவுட் ஆன போதிலும் அதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் அடித்தார்
 
அதன்பின் கேப்டன் விராத் ஒரு ரன்னில் அவுட்டானார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடினர். இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது
 
இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி 186 ரன்க்ள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால் தொடரை வென்று விடும் என்பதால் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments