Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏலியனா மாறனும்னு ரொம்ப நாள் ஆசை! – இன்ஸ்டாவை அலறவிட்ட இங்கிலாந்து வாலிபர்!

Advertiesment
ஏலியனா மாறனும்னு ரொம்ப நாள் ஆசை! – இன்ஸ்டாவை அலறவிட்ட இங்கிலாந்து வாலிபர்!
, வியாழன், 18 மார்ச் 2021 (12:04 IST)
இங்கிலாந்தில் தன்னை ஏலியன் போல மாற்றிக் கொள்ள வாலிபர் ஒருவர் காது, மூக்கு உள்ளிட்ட பாகங்களை அறுத்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 32 வயது இளைஞர் அந்தோணி லெப்ரடோ. சிறுவயதிலிருந்தே ஹாலிவுட் ஏலியன் படங்களை விரும்பி பார்க்கும் இவர் தன்னையும் ஒரு ஏலியனாக மாற்றிக் கொள்ள வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக மெல்ல மெல்ல சில விசயங்களையும் செய்து வந்துள்ளார். காது மடல்களை வெட்டிக்கொள்வது. மூக்கை அறுத்து கொள்வது, நாக்கை இரண்டாக குறுக்கே வெட்டிக்கொள்வது, உடல் முழுவதும் கருப்பு டாட்டூ குத்தி கொள்வது என கடந்த நான்கு வருடமாக செய்து வந்த இவர் தற்போது தன்னை ஒரு முழு ஏலியனாகவே மாற்றி கொண்டுள்ளதோடு கருப்பு ஏலியன் என தனக்கு பெயரும் வைத்துக் கொண்டுள்ளார்.

இவரது புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் லைக்குகளும், பாலோவர்களையும் பெறும் இவர் தன்னை ஏலியனாக மாற்றிக் கொண்டதில் மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துபாயிலிருந்து வயிற்றுக்குள் மாத்திரைகளாக விழுங்கி தங்கம் கடத்தல்!