பாஜகவின் எதிரிக்கட்சிகளில் ஒன்றாக இருந்து வரும் மதிமுக, பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக்கொடியும் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தினமும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் கூறப்படுகிறது.
இருப்பினும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக இருப்பதாக வைகோ கூறிக்கொண்டாலும் ஸ்டாலின் தரப்பில் இருந்து மதிமுகவை கூட்டணியில் இணைப்பது குறித்து எந்தவித உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை. அப்படியே திமுக கூட்டணியில் மதிமுக இணைந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்கு மேல் அந்த கட்சிக்கு ஒதுக்குவது கடினம்தான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனுடன் வைகோ இன்று சந்தித்தது பாஜக கூட்டணியில் மதிமுக சேருவது உள்பட பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது