Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடிய புற்றுநோயால் உயிருக்கு போராடும் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெயின்ஸ்..!

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (19:34 IST)
"டபிள்யு டபிள்யு இ" விளையாட்டில் முன்னணி மல்யுத்த வீரராக இருக்கும் ரோமன் ரெயின்ஸ், லுகேமியா என்ற ஒருவித கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
பொழுதுபோக்கு நிகழ்ச்சியான டபிள்யு டபிள்யு இ"  என்பது, ஒரு மல்யுத்த விளையாட்டு, அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் . 
 
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடின பலர்  பின்னாளில் சூப்பர் ஸ்டார்களாக  பிரபலமடைந்துள்ளனர். அந்த வரிசையில் ஹல்க் ஹோகன், ஆஸ்டின், ஹாலிவுட் நடிகர் ராக், ஜான் சீனா, பிராக் லெஸ்னர் உள்ளிட்டோர் பலகோடி பேர்களால் ரசிக்கப்பட்டவர்கள் . 
 
தற்போது, அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பவர் ரோமன் ரெயின்ஸ், நடப்பு யுனிவர்சல் சாம்பியனான இவருக்கும்  உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்நிலையில், அவர் தனக்கு லுகேமியா என்ற புற்றுநோய் இருப்பதாகவும் அதனால் மிகுந்த அவதிக்குள்ளாகி துன்பப்படுவதாகவும் அறிவித்துள்ளார். கடந்த 11 வருடங்களுக்கு முன்பே, இந்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த அவர் , தற்போது மறுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
மேலும், புற்றுநோய் பாதிப்பால் தனது சாம்பியன் பட்டத்தையும் கைவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள மல்யுத்த வீரர்களையும், ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments