Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக கண்ணே உங்க மேலதான் படுது...! ரோஹித் சர்மா.. வாழ்த்துக்கள்...

Advertiesment
உலக கண்ணே உங்க மேலதான் படுது...! ரோஹித் சர்மா.. வாழ்த்துக்கள்...
, திங்கள், 22 அக்டோபர் 2018 (17:56 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்குள் நுழைவதற்கே தனி திறமை வேண்டும்.அதிலும் உள்ளே நுழைந்தபிறகு தன் திறமையை நிரூபிக்க கடுமையாக போராட வேண்டும் .இத்தமைக்கும் மேலால எவ்வளவு சவால்கள் வந்தாலும் எல்லாவற்றியும் சமாளித்து தன் தகுதியை நிலைநிறுத்துவது மிக முக்கியமாகும்.
அந்த வரிசையில் அசாருதீன் ,சச்சின் ,போன்ற வீரர்களை அடுத்து டோனி,கோலி முதலான  வீரர்கள் தம்  திறமையை  சர்வதேச போட்டிகளில் காட்டினார்கள்.மகுடமும் சூடினார்கள்.
அந்த வரிசையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ரோஹித்சர்மா ஆவார்.இவர் தற்போது அதிக முறை(6) 150பது ரன்கள்  அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளியாடிவரும் இந்திய அணி ஏற்கனவே நடைபெற்ற டெண்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில் இன்று நடந்த ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற சர்மா தன் 20வது சதம் அடித்துடன் மொத்தம் 152 ரன்கள் குவித்தார்.நூற்றைம்பதுக்கும் மேல் ரன்கள் எடுப்பது இது இவருக்கு 6 வது முறையாகும்.இந்த சாதனை செய்த முதல் முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். சர்மா.
 
இதற்கு முன் சச்சின் மற்றும் ஆஸ்திரேலியாவின் வார்னர் ஆகியோர் தலா 5முறை 150 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது .அந்த சாதனை ரோஹித் சர்மா முறியடித்து முதல் இடம் பிடித்துள்ளதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிபோட்டி: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி