Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஸ்வரூபமெடுத்த ரோஹித் ஷர்மா! – இரண்டு இன்னிங்சிலும் சதம்!

Advertiesment
விஸ்வரூபமெடுத்த ரோஹித் ஷர்மா! – இரண்டு இன்னிங்சிலும் சதம்!
, சனி, 5 அக்டோபர் 2019 (20:11 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு இன்னிங்ஸிலும் சதமடித்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளார் ரோகித் ஷர்மா.

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 502 ரன்களை குவித்தது. ரோகித் ஷர்மா 176 ரன் எடுத்திருந்தார். நின்று ஆடி இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் அவுட் ஆனார். அவரோடு பார்ட்னர்ஷிப்பில் மயங்க அகர்வால் 215 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதற்கு பிறகு விளையாடிய தென்னாப்பிரிக்கா ஆரம்பத்தில் சிறப்பாகவே விளையாடியது. ஆனாலும் 431 ரன்னில் விக்கெட்டுகள் இழந்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் காட்டியது.

இந்த முறையும் தனது அதிரடி ஆட்டத்தை காட்டிய ரோகித் ஷர்மா 127 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரை தொடர்ந்து புஜாரா ஒரு அரைசதமடித்தார். 4 விக்கெட்டுகள் இழந்து 323 ரன்கள் பெற்றிருந்த நிலையில் இந்தியா டிக்ளேர் செய்தது. ரோகித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

395 ரன்கள் இலக்குடன் தென் ஆஃபிரிக்கா…