Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா ஒரு பொக்கிஷம்! புகழ்ந்து தள்ளிய இந்திய பவுலர்!

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:53 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ரோஹித் ஷர்மாவை கிரிக்கெட்டின் பொக்கிஷம் என முகமது ஷமி புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் சிறந்த வீரர்களில் ஒருவராவார். இதுவரை 3 முறை ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ள அவர் 400 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். இதனால் அவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் வீரர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் உரையாடி வரும் நிலையில் இர்பான் பதானும் முகமது ஷமியும் உரையாடினர். அப்போது ரோஹித் ஷர்மா பற்றி பேசிய ஷமி ‘ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடுவது போன்றே தெரியாது; ஆனால் எதிரணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்துவிடுவார். அவர் ஒரு பொக்கிஷம் போன்றவர். கிரிக்கெட்டை கற்றுக்கொடுக்க அவர் மிகச்சிறந்த உதாரணம். அவர் சுத்தமான கிரிக்கெட்டர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments