Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் ஏன் சைவத்துக்கு மாறினேன் – கேப்டன் கோலி சொன்ன ரகசியம் !

நான் ஏன் சைவத்துக்கு மாறினேன் – கேப்டன் கோலி சொன்ன ரகசியம் !
, சனி, 4 ஏப்ரல் 2020 (09:55 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி தான் சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது குறித்து பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் நாடு நாடாக சுற்றி வந்த கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் ரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் இந்திய கேப்டன் கோலியை இன்ஸ்டாகிராமில் பேட்டி எடுத்தார்.

அப்போது கோலி தான் ஏன் அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறினேன் எனக் கோலி பேசியுள்ளார். அதில் ‘நான் 2018 ஆம் ஆண்டுக்கு முன்புவரை அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை எனது கழுத்து எலும்பில் வலி ஏற்பட்டு சோதனை செய்த போது எனக்கு யூரிக் அமிலம் அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டது. அதனால் நான் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறினேன். அதன் பின் அமில சுரப்பு சமநிலையில் இருக்கிறது. இப்போது சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் வாழக்கையில் எடுத்த சிறந்த முடிவாக இதை நான் கருதுகிறேன்.

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன். ஒரு போட்டியின் சோர்வில் இருந்து விரைவாக மீள முடிகிறது. டெஸ்ட் போட்டியின் சோர்வில் இருந்து ஒரே நாளில் என்னால் மீள முடியும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி ஒத்திவைப்பு: ஃபிபா அறிவிப்பு!