Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியில் இணைந்த ரோஹித் சர்மாவுக்கு துணை கேப்டன் பதவி

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (15:24 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் உமேஷ் யாதவ்வுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் இணைக்கப்பட்டார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது அணையில் இணைவதற்காக ஆஸ்திரேலிய வந்துள்ள ரோகித் சர்மா அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு துணை கேப்டன் பதவியை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய டெஸ்டில் கேப்டனாக இருந்த ரஹானே கேப்டனாக தொடர்வார் என்றும் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது 
 
ரோகித் சர்மா அணியில் இணைக்கப் பட்டுள்ளதால் தொடக்க ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும், அதுமட்டுமின்றி ரோகித் சர்மா மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

அடுத்த கட்டுரையில்
Show comments