Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா கோல்டன் டக்-அவுட்: மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (20:01 IST)
ரோஹித் சர்மா கோல்டன் டக்-அவுட்: மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி!
இன்று துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடர் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பதை பார்த்தோம். மும்பை அணியின் குவின்டன் டி காக் முதல் ஓவரில் 15 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ஓவரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால் கோல்டன் டக் ஆனார். அவரை எல்பிடபிள்யூ முறையில் அஸ்வின் வெளியேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணியின் கேப்டன் முதல் பந்திலேயே அவுட்டானது மும்பை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் மற்றும் டீகாக் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர் என்பதும் மும்பை அணி சற்று முன் வரை 6 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் மும்பை அணி வென்று இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும் என்பதே அந்த அணியின் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ரசிகர்களின் ஆசையை மும்பை அணி நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments