ஐபிஎல் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஏழு சீசன்களாக டெல்லி அணிக்கு தலைமை பயிற்சி ஆளாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றி வந்தார்.
 
									
										
			        							
								
																	டெல்லி  அணி கடந்த 7 சீசன் களாக சிறப்பாக செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட டெல்லி அணியை கொண்டு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
											
									
			        							
								
																	இதனை அடுத்து டெல்லி அணியின் பயிற்சியாளர் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	இது குறித்து டெல்லி அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏழு சீசனுக்கு பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு இது ஒரு சிறந்த பயணம், நல்ல பயிற்சியாளர், அவரது பணிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	இதனை அடுத்த டெல்லி அணிக்கு புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.