இங்கிலாந்தில் நடைபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 போட்டியில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி.
இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தலைமையில் களம் இறங்கியது. இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் அதிகபட்சமாக 41 ரன்களை அடித்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா என பல பேவரைட் நாயகர்கள் களம் இறங்கினர். ராயுடு ஒரு அரைசதத்தை வீழ்த்தினார். யூசுப் பதான் 30 ரன்களும், குருகீரத் சிங் 34 ரன்களும் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 19.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை குவித்து வெற்றி பெற்றதோடு சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது.
இந்திய அணியின் பல முன்னாள் பேவரைட் நாயகர்கள் இணைந்து கோப்பையை வென்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K