’அந்த விமர்சனங்கள் தான் ’என்னை முன்னேற்றியது - விராட் கோலி 'ஒபன் டாக்'

புதன், 24 ஜூலை 2019 (14:10 IST)
நம் இந்திய கிரிக்கெட் அணி பல சவால்களை கடந்து, உலகில் மிகபெரும் ஜாம்பாவான்களை கொண்ட அணியாகத் திகந்துவருகிறது. சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய அணி தோற்றாலும் கூட நம் இந்திய அணியினரின் மீதான எதிர்பார்ப்புகள் குறையவில்லை.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் தங்கள் மனைவிகளை இங்கிலாந்து அழைத்துப் போனதாக பல சீனியர் விரர்கள் மீது புகார் எழுந்தது. இருப்பினும் வருகிற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்தியா தன்னை ஆயத்தப்படுத்திவருகிறது.
 
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி என்மீதான மோசமான விமர்சனங்கள் என்னை முன்னேறு கொள்வதற்கு உதவியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
ஒரு பிரபல நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ;இளம் வீர்கள் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். இப்போது வரும் வீரர்கள் வயதை மீறிய முதிர்சியில் நடந்துகொள்கின்றனர். ஐ பி எல் தொடர்களாலும் அவர்களின் திறமைகள் வளர்ந்துள்ளது.
 
மேலும் தன்னம்பிக்கையுடன் தங்கள் மீதான தவறுகளை அவர்கள் சரி செய்துகொள்கிறார்கள்.தோனி குல்தீப்புடன் இருந்ததைப் போன்று நானும் இருக்கிறேன். ஓய்வு அறையில் வீரர்களை திட்டும் பழக்கம் எனக்கு இல்லை. என்  மீதான விமர்சனங்களே என்னைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மலிங்காவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மற்றொரு இலங்கை வீரர்