Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் இறுதிப்போட்டி இடமாற்றம் ; சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் – பின்னணி என்ன ?

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (10:07 IST)
இந்தாண்டு நடபெற்று வரும் ஐபிஎல் போட்டித்தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

12 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் 17 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. சராசரியாக ஒவ்வொரு அணியும் 9 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன.

இந்நிலையில் லீக் போட்டிகள் முடிந்ததும் குவாலிஃபையர் மற்றும் இறுதிப் போட்டி நடக்க இருக்கும் வேளையில் அப்போட்டிகள் நடக்கும் இடங்கள் குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. முதலாம் குவாலிஃபயர் போட்டி சென்னையிலும், இரண்டாம் குவாலிஃபயர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் என்றும், இறுதி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மைதானத்தில்தான் இறுதிப் போட்டிகள் நடக்கும். அதன்படி இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சென்னை மைதானத்தில் உள்ள மூன்று கேலரிகளைத் திறக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இன்னும் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை. இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்தும் மொத்தம் 12 பேர் வரைப் பார்க்கலாம். இதனால் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படும் என்பதால் போட்டியை சென்னையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. இறுதிப்போட்டியை சென்னையில் இருந்து மாற்றியதற்கு சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்தரத்தில் தொங்கும் பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி! அடுத்தடுத்து விலகும் முக்கிய வீரர்கள்! - என்ன காரணம்?

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

அடுத்த கட்டுரையில்
Show comments