Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்டிப்பாப்பாவுக்காக ஒரு ரன் எடுக்காமல் விட்டு கொடுத்தாரா தோனி?

Advertiesment
குட்டிப்பாப்பாவுக்காக ஒரு ரன் எடுக்காமல் விட்டு கொடுத்தாரா தோனி?
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (19:31 IST)
ஐபிஎல் போட்டியில் இதுவரை எத்தனையோ போட்டி நடந்திருந்தாலும் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்க மாட்டார்கள். கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் தல தோனி. கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு ரன் எடுத்திருந்தால் கூட சூப்பர் ஓவர் வாய்ப்பு கிடைத்திருக்கும்
 
இந்த நிலையில் 8 பந்தில் 27 ரன்கள் சென்னை அணி எடுக்க வேண்டும் என்ற நிலையில் மைதானத்தில் பார்வையாளராக இருந்த ஒரு குட்டிப்பாப்பா பதாகை ஒன்றை காண்பித்தார். அதில் 'ஹேய் தோனி, எங்க விராத் கோஹ்லி ஜெயிக்கணும்' ப்ளீஸ்' என்று எழுதப்பட்டிருந்தது. கள்ளம் கபடம் இல்லாத அந்த குட்டிப்பாப்பாவின் முகத்தில் தெரிந்த சோகத்தை போக்க வேண்டும் என்பதற்காகவே தோனி விட்டுக்கொடுத்தது போல் தெரிகிறது என பல கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. தோனி கடைசி பந்தை அடிக்காமல் விட்டதும் அந்த குட்டிப்பாப்பா துள்ளி குதித்ததை நேரடி ஒளிபரப்பில் லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர்.
 
இது தற்செயலாக நடந்த ஒன்று என்றாலும் குட்டிப்பாப்பாவின் இந்த இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள், ஷேர்கள் குவிந்து வருகிறது. குட்டிப்பாப்பாவை சிரிக்க வைக்க இன்னும் எத்தனை மேட்ச் வேண்டுமானாலும் தோனி தோற்கலாம் என்ற கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியை பார்த்து கோலி பயந்த காரணம் இதுதான் !