Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை: 2 இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் .. அரைசதம், சதமடித்து அசத்திய ஷர்துல் தாக்கூர்..!

Siva
வெள்ளி, 24 ஜனவரி 2025 (17:03 IST)
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின.

இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரோகித் ஷர்மா வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரர் ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.

ஆனால், அதே நேரத்தில், ஷர்துல் தாக்கூர் இந்த போட்டியில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் 206 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஏமாற்றிய ரோகித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரன்கள் மட்டுமே  எடுத்தார். அதேபோல், முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஷிவம் துபே இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார்.

ஆனால், அதே நேரத்தில்,  முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஷர்துல் தாக்கூர், இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில், மும்பை அணி தற்போது 183 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

மகளிர் உலகக்கோப்பை போட்டி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி..!

ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments