Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

Advertiesment
மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

Siva

, வெள்ளி, 24 ஜனவரி 2025 (07:40 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது மனைவியை பிரிய போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி தம்பதிகள் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தங்களுடைய 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
கடந்த 2000 ஆம் ஆண்டு சேவாக் மற்றும் ஆர்த்தி காதலித்து வந்த நிலையில், இரு தரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டு பிறந்த இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இருவருடைய கருத்து வேறுபாடுகளுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும், இரு தரப்பு குடும்பத்தினர் மீண்டும் இருவரை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உலகக்கோப்பை போட்டி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி..!