டி 20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் இந்திய அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யுவ்ராஜுக்கு அடுத்தப் படியாக முக்கியமான பேட்ஸ்மேனாக ரெய்னா உருவாகிவந்தார். ஆனால் சில ஆண்டுகளாக பார்ம் அவுட் காரணமாக இந்திய அணியில் எந்த வடிவிலானப் போட்டிகளிலும் இடம் கிடைக்காமல் ஒதுக்கப்பட்டுள்ளார். அதனால் மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் இடம்பிடிக்கும் பொருட்டு உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்பொது சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். புதுச்சேரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேற்று விளையாடிய ரெய்னா 12 ரன்கள் சேர்த்து அவுட் ஆகி வெளியேறினார். அவர் 11 ரன்களை சேர்த்தபோது டி20 போட்டிகளில் 8000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை அவர் 300 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 369 போட்டிகளில் 12, ஆயிரத்து 298 ரன்கள் சேர்த்து முதலிடத்திலும். நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கலம் 370 போட்டிகளில் 9,922 ரன்கள் சேர்த்து 2-வது இடத்திலும்.,மே.இ.தீவுகள் வீரர் கிரன் பொலார்ட் 451 போட்டிகளில்8,838 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் மற்றும் இந்தியாவின் ரெய்னா ஆகியோர் முறையே அதற்கடுத்த இடத்தில் உள்ளனர்.