சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (14:54 IST)
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் நேற்று சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று அவர் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். 
 
இன்று நடைபெற்ற போட்டியில் பிவி சிந்து, சீனாவின் வாங்க் ஸிங் இ என்பவரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் பிவி சிந்து மிக அருமையாக விளையாடியதை அடைத்து 21-9,11-21,21-15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து  சாம்பியன் பட்டம் வென்றார் 
 
ஏற்கெனவே பி.வி.சிந்து சையத் மோடி பேட்மிண்டன் தொடர், ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது அவர் சிங்கப்பூர் ஓபன் தொடரையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments