Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை: பி.வி.சிந்துவுக்கு எந்த இடம்?

Advertiesment
pv sindhu champion
, வெள்ளி, 23 டிசம்பர் 2022 (14:55 IST)
உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை பட்டியலில் வந்துள்ள நிலையில் அதில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து எத்தனாவது இடம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
உலகில் அதிக சம்பளம் வாங்கும் 25 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து 12வது இடம் பிடித்துள்ளார். 27 வயதான பிவி சிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றார் என்பதும் அவருக்கு இதுவரை விளையாட்டுத்துறையில் 59 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து அவர் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனை பட்டியலில் 12வது இடத்தை பெற்றுள்ளார். ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நாவோமி ஒசாகா இந்த பட்டியலில் முதலிடத்தை பெற்று உள்ளார் என்பதும் செரினா வில்லியம்ஸ் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருங்காலத்தில் சி.எஸ்.கே-வின் கேப்டனாக சாம் கரன் உயரலாம்: சொன்னது யார் தெரியுமா?