தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் மாற்றுத்திறனாளிகள் பேட்மின்டன் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழக மாணவி வென்று சாதனை படைத்துள்ளார்.
தாய்லாந்து நாட்டில் கடந்த 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்று வரும் 6வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் பல்வேறு பிரிவுகளில் 6 தங்கங்களைக் குவித்து சாதனை புரிந்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேட்மிண்டனில் இன்னும் பல உயரங்களை அவர் எட்டிப்பிடித்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.