Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா ஒன்றும் எனது வாடகை வீடு அல்ல – ஓவைசி பதிலடி

Advertiesment
இந்தியா ஒன்றும் எனது வாடகை வீடு அல்ல – ஓவைசி பதிலடி
, வியாழன், 6 டிசம்பர் 2018 (08:22 IST)
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் எம். பி. ஓவைசிக்கு இடையேயான வார்த்தைப் போர் நீண்டு வருகிறது, இருவரும் ஒருவர் கருத்துக்கு மற்றவர் மாறி மாறி பதிலடிக் கொடுத்து வருகின்றனர்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீப காலங்களில் சர்ச்சைக்குரியப் பல கருத்துகளைக் கூறி வருகிறார். சமீபத்தில் அவர் தாந்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தெலங்கானாவில் பாஜக அமையும் போது ஹைதராபாத் நிஜாமைப் போல எம்.பி. ஓவைசியும் தப்பி ஓடுவார். என தெரிவித்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் பேசிய அகில இந்திய மஜீஸ்-இ-இத்ஹாகுல் முஸ்லிமின் தலைவர் ஓவைசி ‘இந்தியா என் தகப்பன் நாடு, என்னை இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்ல யாராலும் முடியாது.  நான் இந்தியாவின் முதல்தர குடிமகன். மற்றவர்களுக்கு சமமான குடிமகன். நான் வாடகைக்கு குடியிருப்பவன் அல்ல. நான் யோகியை போல அல்ல. இந்தியன் என்பது எனது விருப்பத் தேர்வு.ஜின்னாவின் கொள்கைகளை நாங்கள் ஏற்காதவர்கள் . இந்தியா எங்கள் சொந்த பூமி என்பதை எப்போதும் உறுதியுடன் முழங்கி வருகிறோம். எங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த முடியாது. முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்துவதுதான் பாஜகவின் கோட்பாடு’ எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி ஊழியரை கற்பழித்த காமுகர்கள்: கும்பகோணத்தில் பரபரப்பு