ஐதராபாத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை தெரு நாய்கள் கவ்வி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக குழந்தைகளை தெரு நாய்கள் கடித்து குதறும் சம்பவம் இதனால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் 18 மாத குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த பகுதிக்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் குழந்தையை கடித்து குதறியதாகவும், ஒரு நாய் குழந்தையை வாயில் கவ்வி இழுத்துச் சென்று குதறியதாகவும் தெரிகிறது .
இந்த நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.