கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் அதற்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு கத்தாரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கத்தார் உலகக்கோப்பை போட்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
வெறும் 60 லட்சமே மக்கள் தொகை கொண்ட கத்தாருக்கு உலகக்கோப்பையை நடத்த வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுந்தது. கத்தார் ஃபிஃபாவிற்கு அதிகமான பணத்தை கொடுத்து சம்மதிக்க செய்ததாக சிலர் பேசிக் கொண்டனர். உலகக்கோப்பை முதல்நாள் போட்டியில் கத்தார் அணி ஈக்குவடார் அணியுடன் மோதிய நிலையில் 0-2 என்ற கணக்கில் கத்தாரிடம் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக கத்தார் அணி வீரர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கத்தார் அணி மீது வெளியான குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஷாகீர் நாயக்கை உலகக்கோப்பை விழாவில் பேச கத்தார் அழைத்தது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து கத்தார் சென்ற ஆசிய நாட்டு தொழிலாளர்கள் 6500 பேர் கடந்த 15 ஆண்டுகளில் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டு கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்தை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #BoycottQatar2022 என்ற ஹேஷ்டேகை பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.