கால்பந்தாட்ட உலகின் மூடிசூடா மன்னன் என்றால் அது பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலேதான். பிரேசிலுக்காக அவர் 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலகக் கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது 82 வயதாகும் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் தயாரித்து சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் பெருங்குடல் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பீலேவுக்கு அறுவை சிகிச்சை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து இப்போது அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பீலேவின் மகள் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இப்போது கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல் சரியாக ஒத்துழைக்க வில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.