Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பீலேவுக்கு மருத்துவமணையில் சிகிச்சை!

Advertiesment
புற்று நோயால் பாதிக்கப்பட்ட பீலேவுக்கு மருத்துவமணையில் சிகிச்சை!
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:00 IST)
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் என அழைக்கப்படும் பீலே இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கால்பந்தாட்ட உலகின் மூடிசூடா மன்னன் என்றால் அது பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலேதான். பிரேசிலுக்காக அவர் 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலகக் கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது 82 வயதாகும் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் தயாரித்து சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் பெருங்குடல் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பீலேவுக்கு அறுவை சிகிச்சை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து இப்போது அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பீலேவின் மகள் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டிக்கு நடுவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிக்கி பாண்டிங்!