Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் தலைவாஸ் மீண்டும் படுதோல்வி: கபடி ரசிகர்கள் விரக்தி

தமிழ் தலைவாஸ் மீண்டும் படுதோல்வி: கபடி ரசிகர்கள் விரக்தி
, திங்கள், 9 செப்டம்பர் 2019 (22:56 IST)
புரோ கபடி போட்டி தொடரில் இதுவரை தமிழ் தலைவாஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. மேலும் 9 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியிலும் தோல்வியடைந்து 8 தொடர் தோல்விகளை தமிழ் தலைவாஸ் அணி பெற்றிருப்பதால் கபடி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்
 
 
இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பாட்னா அணி 51 புள்ளிகள் எடுத்திருக்க தமிழ்தலைவாஸ் அணி அதில் பாதியை கூட எடுக்கவில்லை என்பது சோகத்துக்கு உரிய ஒரு விஷயமாகும். தமிழ் தலைவாஸ் அணி வெறும் 25 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் பாட்னா அணி 26 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
 
இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் உத்தரப் பிரதேசம் அணி, குஜராத் அணியை வீழ்த்தியது. உத்தரப்பிரதேசம் 33 புள்ளிகளும் குஜராத் 26 புள்ளிகளும் பெற்றதால் உத்தரப்பிரதேச அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இன்றைய போட்டியின் முடிவிற்குப் பின்னர் டெல்லி, பெங்கால், பெங்களூரு, ஹரியானா, மற்றும் உபி ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவாஸ் தற்போது 11வது இடத்தில் இருந்தாலும் இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் அந்த அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷீத்கான்: ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்று வரலாற்று சாதனை