Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றி: பரிதாபத்தில் நியூசிலாந்து அணி

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (21:07 IST)
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி துபாயில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 167 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது

அதன்பிn முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 90 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஃபாலோ ஆன் ஆகி இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் யாசிர்ஷா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments