Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து: பரிதாபத்தில் பாகிஸ்தான்

Advertiesment
4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து: பரிதாபத்தில் பாகிஸ்தான்
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (09:54 IST)
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அபுதாபியில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நியூசிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 66.3 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் வில்லியம்ஸன் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 63 ரன்கள் அடித்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 83.2 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்தது. இதனால் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 74 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

webdunia
இந்த நிலையில் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி, 249 ரன்கள் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் வெற்றி பெற 176 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு 'ஆஸ்திரேலியா ’ரொம்ப பிடிக்கும் : ரோஹித் சர்மா சீக்ரெட் ...