சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்றைய முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில், பாகிஸ்தான் வீரர் முதல் ஓவரிலேயே காயம் காரணமாக வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அப்போது, அப்ரிடி வீசிய முதல் ஓவரில், ஒரு பேட்ஸ்மேன் பந்தினை வில் யங் வேகமாக அடித்தார். அப்போது, எல்லை கோட்டிற்கு அருகில் அந்த பந்தை பிடிக்க முயன்ற ஃபகார் ஸ்மான் என்பவர் கீழே விழுந்து காயமடைந்தார்.
அவரது முதுகில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகியதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், சற்றுமுன், நியூசிலாந்து அணி 31 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முதல் போட்டியில், தொடக்க ஆட்டக்காரரான வில் யங் 91 ரன்கள் அடித்து இன்னும் களத்தில் உள்ளார்.