Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி செருப்பை கூட உங்களால் தொட முடியாது! பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

Danish Kaneria

Prasanth Karthick

, திங்கள், 10 ஜூன் 2024 (10:22 IST)
நேற்று நடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் அணியை அதன் முன்னாள் கிரிக்கெட் வீரரே கடுமையாக விமர்சித்துள்ளார்.



அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் அணியை 113 ரன்களில் வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தை பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “பாபர் அசாம் செஞ்சுரி அடித்ததும் அடுத்த நாளே அவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் விராட் கோலியின் கால் செருப்பைக் கூட இவர்களால் நெருங்க முடியாது. அமெரிக்காவுடன் விளையாடியபோது அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்ய முடியாமல் பாபர் ஆசம் திணறினார். 40+ ரன்களில் அவுட்டான அவர் தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும். இந்தியாவை தோற்கடிக்கும் திறமை அவர்களிடம் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், திறமையான ஆட்களை தேர்வு செய்யாமல் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் என சிலரை அணியில் எடுத்தால் இப்படிதான் நடக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்!