Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தட்டையான ஆடுகளம்… இந்திய பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்!

Advertiesment
தட்டையான ஆடுகளம்… இந்திய பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்!
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:10 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா 191ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்து 99 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் இந்தியா தனது 2-வது இன்னிங்சை அதிரடியாக விளையாடி 466 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா 127 ரன்கள், புஜாரா 61 ரன்கள், ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள், ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து தற்போது தனது 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் அந்த அணி 293 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓவல் ஆடுகளம் மிகவும் தட்டையாகி விட்டதால், பந்து ஸ்விங் ஆவதில்லை. இதனால் ஐந்தாம் நாளில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் போட்டி டிரா ஆகவோ அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெறவோ கூட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது இன்னிங்ஸில் 466 ரன்கள்: இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?