Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் நடிக்கிறேனா? பிரேசில் அணி நட்சத்திர வீரர் காட்டம்!

நான் நடிக்கிறேனா? பிரேசில் அணி நட்சத்திர வீரர் காட்டம்!
, புதன், 4 ஜூலை 2018 (16:02 IST)
மெக்சிகோ அணி பயிற்சியாளர், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரை தாக்கி பேசியிருந்தார். நெய்மரால்தான் போட்டியில் மெக்சிகோ தோற்றது என்ற வகையில் பேசியிருந்தார். 
 
அதாவது, மெக்சிகோ மற்றும் பிரேசில் இடையான போட்டியின் போது நெய்மருக்கு காயம் ஏற்பட்டு வயியால் துடித்தார். ஆனால், இது பலருக்கும் மிகைப்படுத்தும் வகையில் இருந்ததாக கூறப்பட்டது. 
 
இதற்கு மெக்சிகோ பயிற்சியாளர், நெய்மரின் இந்த நடிப்பு கால்பந்தாட்டத்துக்கு நல்லதல்ல. இது கால்பந்தாட்டத்துக்கு அவமானம். அந்த ஒரு வீரரால் நாங்கள் நிறைய நேரங்களை இழந்தோம் என விமர்சித்திருந்தார். 
 
இந்நிலையில் நெய்மர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு... இவை என்னை கவிழ்ப்பதற்காக கூறப்படுவதேயன்றி வேறில்லை. நான் விமர்சனத்தை மதிப்பவனில்லை, பாராட்டுதலையும் கூட நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏனெனில் இது ஒரு விளையாட்டு வீரனின் அணுகுமுறையில் தாக்கம் செலுத்தும்.
 
கடந்த 2 போட்டிகளாக நான் செய்தியாளர்களைக் கூட சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். காரணம் அதிகம்பேர் ஏதேதோ பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பதற்றமடைகின்றனர். என் சகாக்களுடன் வெற்றிபெறவே நான் இங்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் அபார சதம்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா