ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய நாக் அவுட் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பார்க்கப்படும் பிரேசில் அணி இந்த போட்டியில் ஆக்ரோஷமாக விளளயாடியது. ஆனாலும் பிரேசில் அணிக்கு இணையாக மெக்சிகோவும் தடுப்பாட்டத்தை கையாண்டதால் இரு அணிகளும் முதல் பாதியில் ஒரு கோல் கூட போடவில்லை
இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேசியில் அண்யின் நெய்மர் அசத்தலான ஒரு கோலை 51வது நிமிடத்தில் போட்டார். இதனால் பிரேசில் அணி 1-0 என்று முன்னிலை பெற்றது. இந்த கோலை சமன்படுத்த மெக்சிகோ வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனால் கடைசி நிமிடத்தில் அதாவது 90வது நிமிடத்தில் பிரேசில் வீரர் பிர்மிடோ இன்னொரு கோல் அடித்து மெக்சிகோவுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
இதனால் பிரேசில் அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து பிரேசில் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.