Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 தொடருக்கு பழிவாங்கிய நியூசிலாந்து: மூன்றிலும் வெற்றி

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (15:11 IST)
டி20 தொடருக்கு பழிவாங்கிய நியூசிலாந்து
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்ற நிலையில் அதற்கு பழிவாங்கும் வகையில் ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்த உள்ளது
 
ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை வென்ற நியூசிலாந்து அணி, இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்றுள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47.1 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் மற்றும் நிக்கோலஸ் தலா 66 மற்றும் 80 ரன்கள் எடுத்து கொடுத்த நல்ல அடித்தளம் கொடுத்ததும், கடைசியில் கிராந்தோம் அதிரடியாக 28 பந்துகளில் 58 ரன்கள் எடுத்ததும் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி வெலிங்டன் மைதானத்தில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments