மோசமாக விளையாடும் விராட் கோலி: ரசிகர்கள் வேதனை!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (14:46 IST)
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேப்டன் விராட் கோலி மோசமாக விளையாடி வருவது ரசிகர்களுக்கு வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான தொடர் போட்டிகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நடந்த டி20 போட்டிகளில் இந்தியா வெற்றிப்பெற்று தொடரையும் கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவின் வெற்றி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்தியா தொடரையும் இழந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தவிர அனைவரும் சுமாரான ஆட்டத்தையே கொடுத்திருக்கின்றனர்.

முக்கியமாக கேப்டன் விராட் கோலி இந்த மூன்று ஆட்டங்களிலும் சேர்த்து மொத்தமே 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அவரது கேப்டன்ஷிப் சரியில்லை என்றும் ரசிகர்கள் குறைப்பட்டுக் கொள்ள தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments