இன்னிங்ஸ் தோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஹாமில்டன் நகரில் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது
இந்த நிலையில் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
முன்னதாக நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த 7 விக்கெட் இழப்பிற்கு 519 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் மிக அபாரமாக விளையாடி 251 ரன்கள் அடித்தார். லாத்தம் 86 ரன்களும், ஜேமிசன் 51 ரன்களும், எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் உதிரி ரன்கள் மட்டும் 47 என்பது ஆச்சரியமான ஒன்றாகும்
இந்த நிலையில் முதலாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 138 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் ஃபாலோ ஆன் ஆகி மீண்டும் பேட்டிங் செய்தது
இரண்டாவது இன்னிங்ஸில் பிளாக்வுட் சதம் அடித்தாலும் அந்த அணி 247 ரன்களுக்கு அவுட் ஆனதால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடதக்கது. அபாரமாக இரட்டை செஞ்சுரி அடித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது