இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மிக அருமையாக விளையாடி வருகிறார். இந்த சீசனில் அவர் 350 ரன்களுக்கு மேல் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இவ்வளவு அருமையாக பேட்டிங் செய்யும் சூர்யகுமார் யாதவ் பெயர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணியில் இல்லை என்பது சோகமான ஒன்றாகும். இதனால் சூரியகுமார் தரப்பு மிகவும் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரிகிறது
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டைரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணியில் சூரியகுமார் யாதவுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் எங்கள் நாட்டு அணிக்காக விளையாடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். நியூசிலாந்து அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாட சம்மதம் தெரிவித்தால் தானே வில்லியம்சன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய அனுமதி பெற்றுத்தர தயார் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
சூரியகுமார் யாதவை இந்திய அணி இணைக்காவிட்டால் அவர் நியூசிலாந்து அணிக்கு விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்திய அணி ஒரு நல்ல பேட்ஸ்மேனை இழக்காமல் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது