101 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 431 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 239 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெற்றிக்கு தேவை 377 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது
இந்த நிலையில் நேற்றைய ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தால் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 101 ரன்னில் வெற்றி பெற்றது என்பதும் இந்த தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 431/10
வில்லியம்சன்: 129
டெய்லர்: 70
வெயிட்டிங்: 73
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 239/10
முகமது ரிஸ்வான்: 71
ஃபஹீம் அஸ்ரவ்: 91
அபித் அலி: 25
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்:
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ்:
பஹத் ஆலம்: 102
முகமது ரிஸ்வான்: 60