Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா

Advertiesment
கரூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (17:35 IST)
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாரபில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஸ், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.,கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.



கடந்த 29 ம் தேதி கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கி விளையாட்டு போட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் நடை பெற்றது. ஓட்டப் பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். விளையாட்டில் வெற்றிபெற்றவர்களுக்கான  பரிசளிப்பு விழா கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்சியில்., வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை மாவட்ட வருவாய் அலுவலர் சூரிய பிரகாஷ், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் வழங்கினார். இந்த விழா ஏற்பாடுகளை கரூர் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் சாந்தி சிறப்பாக செய்திருந்தார்.


 


சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசின் 2019 பட்ஜெட் - ஒரு அலசல்...