Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

Mahendran
வெள்ளி, 13 ஜூன் 2025 (13:12 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான ஃபின் ஆலன், டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இவர் கிறிஸ் கெய்ல் அடித்த 18 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
 
 அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் எம்எல்சி டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிக்காக விளையாடிய ஃபின் ஆலன், அதிவேகமாக சதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
 
இந்த ஆட்டத்தில், வெறும் 51 பந்துகளில் அதிரடியாக 151 ரன்கள் குவித்து, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 19 சிக்ஸர்களையும், 5 பவுண்டரிகளையும் விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 269.08 ஆக இருந்தது. எம்எல்சி டி20 தொடரின் முதல் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணி 269/5 ரன்கள் எடுக்க, வாஷிங்டன் ஃபிரீடம் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஃபின் ஆலன், டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
 
டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:
 
ஃபின் ஆலன் - 19 சிக்ஸர்கள் (2025)
கிறிஸ் கெயில் - 18 சிக்ஸர்கள் (2017)
சாஹில் சௌஹான் - 18 சிக்ஸர்கள் (2024)
கிறிஸ் கெயில் - 17 சிக்ஸர்கள் (2013)
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments