Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 13 ஜூன் 2025 (10:14 IST)
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இந்த தொடருக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் போது தொடர்ந்து தோல்விகளைப் பெற்று வரும். ஆனால் தோனி மற்றும் கோலி கேப்டன்சியில் இந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்திய அணி தொடர்களை வென்றது.

ஆனால் இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் வெற்றி என்பது இந்த தொடரில் கேள்விக்குறியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணிக்கு தொடக்க ஜோடியாக யார் யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே எல் ராகுல்- ஜெய்ஸ்வால் ஜோடியா அல்லது ஜெய்ஸ்வால்- சாய் சுதர்சன் ஜோடியா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர்தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய் சுதர்சன் மூன்றாவது பேட்ஸ்மேனாகவும், ஷுப்மன் கில் நான்காவது பேட்ஸ்மேனாகவும் விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments