Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து அணியை சிதறடித்து இந்திய அணி வெற்றி...

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (15:33 IST)
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேப்பியரில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
 
முதலில் விளையாடிய நியூஸிலாந்து 38 ஓவரில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதனையடுத்து ,போதிய வெளிச்சமின்மை காரணமாக 49 ஓவரில் 156 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 34.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
 
இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 , முகமது ஷமி 3, சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இந்திய அணி அதிகபட்சமாக ஷிகர் தவான் 75 விராட் கோலி 45 ரன்கள் எடுத்தனர். இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments