Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நடிகை கர்ப்பம்

Advertiesment
ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நடிகை கர்ப்பம்
, திங்கள், 1 ஜூன் 2020 (07:47 IST)
ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நடிகை கர்ப்பம்
பிரபல ஆல்ரவுண்டரும் கிரிக்கெட் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவருமான ஹர்திக் பாண்ட்யாவுக்கும், செர்பியா நாட்டின் நடிகை நடாஷாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் மே மாதம் நடக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரொனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமணம் தள்ளிப் போய் விட்டதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் நடிகை நடாஷா கர்ப்பமாக இருப்பதாக ஹர்திக் பாண்ட்யா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இருவரும் ஒரு நல்ல எதிர்காலத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றும், எங்களது குடும்பத்தின் ஒரு புது வரவை கூடிய விரைவில் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறி நடாஷா தற்போது கர்ப்பமாக இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
 
மேலும் எங்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாகவும், இதனால் இருவரும் பரவசமாக இருப்பதாகவும், எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
திருமணத்திற்கு முன்னரே நடிகை நடாஷா கர்ப்பமாக இருக்கும் தகவல் அனைத்து ஊடகங்களிலும் தற்போது தலைப்பு செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள்: கோலிக்கு எத்தனையாவது இடம்?