தோனி நமக்குக் கிடைக்கமாடடார் – இங்கிலாந்து கேப்டன் அதிரடி !

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (16:59 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தோனி ஓய்வுபெறுவது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

உலகக்கோப்பைக்குப் பின்  சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மட்டுமே ஒரே வாய்ப்பு என சொல்லப்பட்டது. இதை முன்னாள் வீரர் கபில்தேவ் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகமாகியுள்ளது. மேலும் நடந்து அதில் சிறப்பாக அவர் விளையாடினாலும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இதுபோல தோனி இந்திய அணியில் இடம் பிடிப்பது குறித்தது பலரும் பலவிதமாக பேசிவரும் நிலையில் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ‘தோனியின் இந்திய கனவு முடிந்துவிட்டதாக அவர் நினைக்கிறார்.  டி20 உலகக் கோப்பையை தோனி குறிவைக்கவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தால் அதற்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமை தற்போது கடந்துவிட்டது என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார். இதுபோல பலரும் தோனி குறித்தான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான நாசர் ஹுசைன் ‘தோனி அணிக்கு இன்னும் அதிகமாக பங்களிக்க முடியும். அவர் சில தோல்விகளை சந்தித்திருந்தாலும், அவரிடம் திறமை உள்ளது. பிசிசிஐ அவரிடம் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு முறை அவர் ஓய்வு பெற்றுவிட்டால் மீண்டும் கிடைக்கமாட்டார். தோனி என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அனால் அணியில் தொடர விரும்புவதாகவும் தேர்வுக் குழுவினர் தன்னைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments