Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அத்தியாவசிப் பொருட்களான மருந்துகளை வீடு தேடி சென்று வழங்கும் திட்டம்-தலைமைச் செயலாலர்

அத்தியாவசிப் பொருட்களான மருந்துகளை வீடு தேடி சென்று வழங்கும்  திட்டம்-தலைமைச் செயலாலர்
, சனி, 11 ஏப்ரல் 2020 (21:02 IST)
சீனாவில் இருந்து பல்வேறு  உலகநாடுகளில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் எனவும், இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும்,  நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக 58 பேருக்குக் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டொர் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஈரோட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை அமைச்சரவை கூட்டம் தொடங்க இருந்த  நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 12 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்து அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிப் பொருட்களான மருந்துகளை வீடு தேடி சென்று வழங்கும்  திட்டம் ஏப்ரல் 13 ஆம் தேதிமுதல் செயல்படுத்தப்படும் என  தலைமைச் செயலாலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா நோயாளிகளை கண்டறிய புதிய செயலி... ஆப்பிள்,கூகுளின் கூட்டுமுயற்சி !