Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து நரேன் கார்த்திகேயன்.. என்ன சொன்னார் தெரியுமா?

Siva
திங்கள், 2 செப்டம்பர் 2024 (17:31 IST)
மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் வீரர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறவும் உதவுகிறது. இந்த நிகழ்வு இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உயர்மட்ட பந்தயத்திற்கான மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தும். தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை இந்தப் பந்தயத்தை நடத்துவது மேலும், சிறப்பாகும் என சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், ஆற்றல்மிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், இந்தியன் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் சுற்றுகளுடன் இரவு நேர வீதிப் பந்தயத்தை தொடங்கி வைத்துள்ளார். 
 
இந்த முன்முயற்சி இந்திய கார் பந்தய வீரர்களுக்குச் சர்வதேசத் தளத்தில் போட்டியிடுவதற்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும்; மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் அவர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறவும் உதவுகிறது. இந்த நிகழ்வு இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உயர்மட்ட பந்தயத்திற்கான மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தும். தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை இந்தப் பந்தயத்தை நடத்துவது மேலும், சிறப்பாகும்". என்று கூறி தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக துட்டு உள்ள அணி இதுதான்.. RTM கை கொடுக்குமா?

இரட்டை சதத்தை நோக்கி ஜெய்ஸ்வால்.. 2வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் அசத்தல்..!

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

அடுத்த கட்டுரையில்
Show comments