Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நாள் கூட ஆகல.. 1 மில்லியனை தாண்டி வைரல்! – ட்ரெண்டாகும் தல தளபதி க்ளிக்ஸ்!

Advertiesment
ஒரு நாள் கூட ஆகல.. 1 மில்லியனை தாண்டி வைரல்! – ட்ரெண்டாகும் தல தளபதி க்ளிக்ஸ்!
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (15:22 IST)
நேற்று நடிகர் விஜய்யுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி இணைந்து எடுத்திருந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நெருங்க உள்ள நிலையில் பயிற்சிக்காகவும் விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்காகவும் சென்னை வந்துள்ளார் தோனி. இதனிடையே தோனியும் நடிகர் விஜய்யும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்துக்கொண்டனர். 

இந்த புகைப்படங்கள் நேற்று முதலாக சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட நிலையில் 24 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் லைக்குகளை தாண்டி சென்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படி பொறந்தா உங்களுக்கு என்ன...? கடுப்பான சாண்டி மனைவி!