வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது பும்ரா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பும்ரா இல்லாமல் இந்திய அணி 14 பேர் கொண்ட அணியாகவேக் கருதப்படும் என இங்கிலாந்து முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் கூற்யிருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இது குறித்து பேசும்போது “பும்ரா இல்லை என்றால் என்ன? ஒரு அணி என்பது எப்போதும் ஒருத்தரை மட்டும் நம்பி செயல்படுவது இல்லை. அவருக்கு உடல்தகுதி இல்லை என்பது வருத்தமான விஷயம்தான். ஆனால் விளையாடச் செல்லும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.